மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா?
முடியுமென்றால் முயற்சித்துப் பாருங்கள்!!
நீங்கள் இதைக் கேலிக்கூத்தாகக் கூட நினைக்கலாம்…
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
- நீங்கள் 'பெஞ்ச்' அல்லது 'நாற்காலி'யின் மீது அமர்ந்திருந்தால் உங்களுடைய வலது காலை சற்று மேலே தூக்கி கடிகாரச் சுற்றில் (Clock-wise) ஒரு வட்டம் போடுங்கள்
- இப்போது காலை நிறுத்தாமல் உங்களின் வலது கையால் காற்றில், அதாவது உங்களின் முகத்திற்கு நேராக எண் ஆறு (6) போடவும்...........
......................................................
- என்ன? தலை சுற்றுமே!!
முயற்சித்துப்பாருங்கள்!! முடியவில்லையா??
சிரித்ததுதான் மிச்சம்… ஆம்…..
உங்கள் காலின் டைரக்ஷன் மாறிவிடும், காலை ஒரு நிலைப்படுத்தினால் கையின் டைரக்ஷன் மாறிவிடும்….
மனதைக் கட்டுப்படுத்த முடிகிறதா? மூளையைக் கட்டுப்படுத்தினாலும் உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்த உங்களால் முடிந்தால், கண்டிப்பாக நீங்கள் எதையும் சாதிக்கமுடியும்.
இது அறிவியல் சம்பந்தப்பட்ட உடலியல் கூற்று என்றாலும் ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் அடங்கியிருக்கிறது.
"உங்கள் ஆத்மா உங்களை எங்கு இழுத்துச்செல்கிறதோ அங்கு உங்களால் செல்ல முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர். ஆத்மா எப்போதுமே நல்ல திசையை நோக்கியே இழுத்துச்செல்லும்"
"உங்களால் அதை நோக்கிச் செல்ல முடியாமல் உடலை நோக்கி ஆத்மாவை இழுக்க முடியும் என்றால் நீங்கள் சாதாரண மனிதர். அதைத்தான் எல்லோருமே செய்கிறோம்"
ஆக அதை ஒரு நிலைப் படுத்தி விட்டோம் எனில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விடலாம்.
- கால் செய்வது சாதாரண மனிதன் செய்வது
- கை காற்றில் செய்வது ஆத்மா செய்வது
ஆத்மாவும் உடலும் ஒன்று சேர்ந்தால் மனிதன் உயர்நிலையை அடைவான் - ஒரு மனிதன் ஒரு நேரத்தில் ஒரு பாதையில்தான் செல்லமுடியும். இரண்டு வேறுபட்ட வழிகளில், பாதைகளில் செல்ல முடியும் என்றால், நீங்கள் சாதாரணப் பிறவி இல்லை.
இப்படி இன்றைக்கு இந்தப் ப்ரபஞ்சத்தில் ஒரு சிலரே உள்ளனர். நாமும் முயற்சிப்போம்!! முடியும்!!!
- நவநீ (ஆக்கம்: யாரோ - நன்றி) எங்கோ படித்தது
1 comment:
Anmeega pakkam. Arputham.y
Post a Comment