April 30, 2007

ஏ இந்தியனே!

இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், ஏன்? இந்தியா மீது அக்கறை கொண்ட, இந்தியாவைப் பற்றி படித்த, ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கூடத் தெரிந்த, அறிந்த ஒரு விசயம் என்னவெனில்,
“இந்தியாவுக்கும் அதாவது இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் (சீறிலங்கா) இடையே இராமாயண காலத்தில், கிட்டத்தட்ட 17,50,000 ஆண்டுகளுக்கு முன், த்ரேதா யுகத்தில் ‘வானர சேனை’களால் சாட்சாத் இராமபிரான் மேற்பார்வையில், முன்னிலையில் பாலம் (வரதி) ஒன்று கட்டப்பட்டது”.
இது படித்ததோடு சரி. உண்மையா? பொய்யா? யாருக்காவது தெரியுமா? ஆனால் ‘நாசா’ (NASA) ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாலம் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சந்தோசமான விசயம்.

“ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படக்கூடிய விசயமும் கூட”

காரணம் அதற்குச் சூட்டியிருக்கக்கூடிய பெயர் “ஆதாம் பாலம்” (ADAM BRIDGE).

ஏ இந்தியனே!
இதுவரை நீ
இளிச்சவாயனாக இருந்தது போதும்!
இனிமேலாவது விழித்துக்கொள்!!


'லண்டன் பாலம்' (LONDON BRIDGE) மற்றும் அமெரிக்காவில் உள்ள 'கோல்டன் கேட் ஆப் அமெரிக்கா' (GOLDEN GATE) போன்றவற்றை "இராமர் பாலம்" என்றோ அல்லது "லட்சுமணர் பாலம்" என்றோ நாம் பெயர் சூட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னொரு உலக யுத்தம் வெடிக்கும்.

இந்தியனே!
தமிழனே!! சிந்தித்துப்பார்!!!
இதற்காக நீ செய்யப்போவது என்ன?
குறைந்தபட்சம் இந்த விசயத்தை
உனக்குத் தெரிந்த வட்டத்துக்குச் சொல்
காலம் பதில் சொல்லும்!

நீ உன் கடமையைச் செய்தால்…..

பாலம் யார் கட்டியது? யார் மேஸ்திரி வேலை பார்த்தார்? எத்தனை சித்தாள் வேலை செய்தார்கள்? அதில் எந்தெந்த சாதிக்காரன் என்ன பங்கு வகித்தான் என்பதெல்லாம் அடுத்த விசயம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணம், மஹாபாரதம் போன்ற மானுடம் போற்றும் இதிகாசங்களைக் கற்பனை என்று கேலி பேசிக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளைக் கண்ணத்தில் அறைந்தாற்போல் விஞ்ஞானம் இன்று பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" என்று பேசுவது எத்தனை தூரம் உண்மை? நம் பாரம்பரியம் என்ன? நம் வரலாறு என்ன? அதில் எத்தனை புதிர்கள் அடங்கியிருக்கின்றன? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் தோன்றிய மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? மனிதன் எப்படி வாழ்ந்தான்? நமது கலாச்சாரம் என்ன? நமக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எப்படி? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் இந்த விண்வெளிப் புகைப்படங்களைப் பாருங்கள்.

நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் இவைகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த ப்ரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஆன்மீகப்பாதையில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்தியக் கலாச்சாரம் எப்படிப்பட்டது, நமது தொடக்கம் என்ன? நமது மூலம் யார்? இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் நம் இந்தியப் பங்கீடு என்ன? நாம் எப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்கவர்கள் என்றெல்லாம் புரியும். ஆக,
எனதருமை தோழர்களே!

உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

நமது சக சகோதரர்களுக்கும் இதனைச்சொல்லுங்கள்!!

விதைத்து வைப்போம், முளைக்கும்போது முளைக்கட்டும்
ஆனால் நாம் விதைக்கக்கூடிய ஒவ்வொரு விதையும் ஆலவிருட்சங்களாக அணி வகுக்கட்டும்.

நவநீ
இதுபற்றி முழுவதும் அறிய மேலே தலைப்பை 'க்ளிக்' செய்யவும்.
பின் குறிப்பு : இதுபற்றி மெய்லில் பெற தயவுசெய்து தங்களின் மெய்ல் முகவரியை எனக்கு அனுப்பவும். எனது குறிக்கோள்!! இந்த விசயம் உலகத்தின் எந்த மூலையில் இந்தியன் இருந்தாலும் அவன் இதுபற்றித் தெரிந்து "குரல்" கொடுக்கவேண்டும்.


No comments: