"பதிலடி"
செஸ்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்தார். ஷா ஒல்லியாக இருந்தார், செஸ்டன் உடல் பருத்தவர், ஷா'வைப்பார்த்து "தங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது போல் தெரிகிறது" என்றார் கிண்டலாக. பெர்னாட்ஷா அமைதியாக, "தங்களைப் பார்த்தால் இந்தப் பஞ்சத்துக்கு காரணமே நீங்கள்தான்" எனத்தோன்றுகிறது என்றார்.
அறிஞர் அண்ணா ஒருமுறை மேடையில் "நம் நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து காக்க இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் மிலிடரிக்குச் செல்லவேண்டும்" என்று உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். உடனே கூட்டத்திலிருந்த ஒருவன் "மொதல்ல நீங்க போங்க, அப்பறம் நாங்க போறோம்" என்றான். அண்ணா மிக நிதானமாக, "நாலரையடி மனிதனை மிலிடரியில் எடுத்துக்கொள்வார்களென்றால் நான்தான் அங்கு முதல் ஆளாக இருப்பேன்" என்று சொன்னாராம். என்ன நிதானம், பொறுமை, பக்குவம்!
No comments:
Post a Comment