May 11, 2007

"YIELD" or

"விட்டுக்கொடுத்தல்" அதாவது ஒருவர் அல்லது அளவான நபர்கள் செல்லும் இடங்களில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவான ஒன்று. அது வாகன ஓட்டுதலிலும் உண்டு. இங்கு அமெரிக்காவில் அதனை ஆங்கிலத்தில் 'YIELD' என்று சொல்வார்கள். அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தொடக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று குழப்பமாகவும், கோபமாகவும் இருக்கும். போகப்போக பழகிவிடும். ஆனால் நம் இந்தியாவில் இதற்கென்று தனி விதிமுறையோ, அறிவிப்புப் பலகையோ, சிக்னலோ இல்லை. ஆனால் இங்கு வந்த பிறகு மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. இவர்களால் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் வாகனம் ஓட்ட முடியாது. குறிப்பாக இவர்கள் இங்கு 'கியர்' இல்லாத 'ஆட்டோ கியர்' வாகனங்கள் ஓட்டுபவர்கள்.
இதையெல்லாம் சொன்னால் "இந்தியன் தாத்தா" "COUNTRY FRUIT" "தேசத்தந்தை" என்று நம் இந்தியர்களே என்னைக் கேலி பேசுகிறார்கள். என்ன செய்ய? சரி அது போகட்டும்... இதனைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அவர்களாகவே 'YIELD' கொடுத்துச் செல்வார்கள், இதனைக் கண்ட அமெரிக்கர்கள் சிலர் கிண்டலாகவும், கேலிக்கூத்தாகவும் படமெடுத்துக் கொண்டுவந்து இங்கு அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ. அமெரிக்காவில் அனைத்துமே சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்..ஆனாலும் அத்துமீறல்கள், அகோர விபத்துக்கள் அதிகமாவே நடந்து கொண்டிருக்கிறது நாம் கண்கூடாக பார்க்கும் விசயம். ஆனால் இந்த வீடியோவில் யாருமே இல்லாமல் தாங்களாகவே விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து விபத்தில்லாமல் செல்வதைப் பார்க்கும் போது சற்று உதறலாக இருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மறக்காமல் அடுத்த பதிவையும் பார்க்கவும். ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, மேலும் அது உங்களுக்குத் தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.கார் மற்றும் வாகனம் ஓட்டுவதென்பது ஒரு கலை. அதுவும் அமெரிக்க நெடுஞ்சாலைகளில் மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். விபத்துக்கள் அதிகம் நடக்கும், எல்லாமே மிக மோசமான விபத்துக்களாகத்தான் இருக்கும். முக்கியக் காரணம், அதிவேகம், வாகன நெருக்கங்கள் போன்ற பல காரணங்கள். எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டும் தினந்தோறும் நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : 1.இங்கு அனைவருமே போக்குவரத்து விதிகளைக் கடுமையாக மதிப்பவர்கள். 2.குறிப்பாக இந்தியர்கள் மிக ஒழுக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3.விதிகளை அதிகம் மீறுபவர்கள் அமெரிக்கர் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். 4.அதற்கும் முக்கியக் காரணங்கள் மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதுதான், கடுமையான தண்டனைகள், அபராதங்கள், சட்ட விதிமுறைகள் இருந்தும் குறைந்தபாடில்லை.

இதையெல்லாம் நினைக்கும்போது நம் இந்தியா ஆயிரம் மடங்கு சிறந்ததாகத் தோன்றுகிறது என்பது உண்மையே! இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாம் இந்தியாவில் எப்படி வாகனங்கள் ஓட்டுகிறோம் என்று நினைத்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது. அங்கு நம் சாலைகளில் ஓட்டும்போழுது எதுவுமே தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து அதை உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் மிக பிரமிப்பாகவும் அதே வேளையில் பயமாகவும் இருக்கிறது.

இங்கு நம் இந்திய நண்பர் டாக்டர் திரு.ஆதிராஜ் என்பவர் இதற்காக ஒரு தனி வளைப்பதிவையே வைத்திருக்கிறார். அவரின் வீடியோப் பதிவின் சிலவற்றை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது அமெரிக்க வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, அகில உலக நண்பர்களுக்கும். சரி... இன்று 'ஹெட்லைட்' உபயோகிப்பது தொடர்பான ஒன்று.

1 comment:

Bala said...

Pakikka vendiyavai. Nantraka irunthathu. Puthithaga oru nattai patri therinthukonda thirupthi alithathau.Nantri . Ithupontra informativeana vishayangalai ethirparkkirom.