"பழமொழி"

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் எனது அருமை நண்பரும், உங்களின் அபிமானத்துக்குரிய நண்பருமான திரு.ஸ்ரீ அவர்கள். நிகழ்ச்சியில் விருந்தினராக வந்து மிகத்தெளிவாக பழமொழிகளைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் நம்மோடு பகிர்ந்துகொண்டவர் திருமதி.டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள். மேலும் இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகளைத் தமிழகத்தில் ஏன்? இந்தியத் தொலைக்காட்சிகளிலோ அல்லது வானொலியிலோ ஒளி அல்லது ஒலி பரப்பியதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் அமெரிக்காவில் கேட்கமுடிகிறது என்றால் நம்பமுடிகிறதா? அது மட்டுமின்றி ஒலிபரப்பிய பாடல்களும், தொகுத்து வழங்கிய விதமும் என்னை மிகவும் பிரமிப்புக்குள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியைக் கேட்கும்பொழுது நாம் நமது கிராமங்களில், ஒலிபெருக்கிகளில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அந்தப் பசுமையான வயல்களில், ரம்மியமான உணர்வுகளோடு செல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. இந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியைக் கேட்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் கேட்டு உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்வதோடு, நேரடியாக வானொலி நிலையத்தாருக்கும் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி (itsdiff@gmail.com). நன்றி. நிகழ்ச்சியைக் கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
Archives
Archives
Archives
No comments:
Post a Comment