
அவர்கள் சீதையிடம் அங்கு நின்ற ஒவ்வொருவராக காட்டி, "இவர் ராமரா?, இவர் ராமரா?' என கேட்டுக்கொண்டே வந்தனர். சீதையும் "இவர் ராமர் இல்லை. இவர் ராமர் இல்லை' என சொல்லிக்கொண்டே வந்தாள். கடைசியாக ரிஷிபத்தினிகள் ராமனைச் சுட்டிக்காட்டி, "இவர் ராமரா?' என்று கேட்டார்கள். சீதை பதில் சொல்லாமல் நாணத்துடன் தலையை கவிழ்ந்துகொண்டாள். "இவர்தான் ராமர்' என்று கூறவில்லை.
இதிலிருந்து ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ளவர்கள் கடவுள் தங்கள் அருகில் இருந்தும் அடையாளம் காணத் தவறி விடுகிறார்கள். அதே நேரம், பிற பொருட்கள் கடவுளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். சிலருக்கு பணம் கடவுளாகத் தெரிகிறது. சிலருக்கு உலக இன்பங்கள் கடவுளாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால், நிஜமான பக்தன் எல்லோரையும் கடவுளாகப் பார்க்கிறான். எந்நேரமும் கடவுளுடனேயே இருக்கிறான். நாமும் எல்லாரையும் கடவுளாகப் பார்ப்போமே!
- பகவான் ரமணர்
No comments:
Post a Comment