July 28, 2007

கொட்டாவி நல்லதா கெட்டதா?

ஆவ்வ்வ்வ்... என்று, கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பவர்களை பார்த்தால், "என்ன, சரியா துங்கலியா?" என்று சிலர் கேட்பர்.
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும்.

சோர்வு மற்றும் துõக்கத்துக்கான அறிகுறி என்று தான் இதுவரை, கொட்டாவியை பற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தது! ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புது தகவல்கள் கிடைத்துள்ளன.

நியூயார்க் அல்பேனி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவர்கள் கூறியது :

கொட்டாவி, நல்லது தான். துõக்கமில்லாமல் இருப்போருக்கு வருவது தான் கொட்டாவி, அதனால், சோர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல் லாம் சரி தானா என்ற கேள்வியை, இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.

உடலில், ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு அளவில் மாற் றம் ஏற்படும் போது, கொட்டாவி ஏற் படும். கொட்டாவி விடுவதில் இருந்து தான் இந்த இரண்டின் அளவுகள் சீராகின்றன என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால், கொட்டாவி ஏற்பட, ஆக்சிஜனோ, கார்பன்-டை-ஆக்சைடோ காரணம் அல்ல என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி வருகிறது. மூளை இயக் கம் துவண்டு போகாமல், அதை மேலும், வலுப்படுத்தவே, கொட்டாவி வருகிறது என்பது தான் உண்மை என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

நாங்கள் 44 பேரை வைத்து, இதற்கான சோதனையை செய்தோம். அவர்களில் சிலர், சிரித்தபடி இருந்தனர். சிலர், வீடியோ படம் பார்த்தபடி இருந்தனர். இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். எல்லாரும் சில முறையாவது கொட்டாவி விட்டனர். மூக்கில் வெற்றிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த நாளங்கள், மூளைக்கு குளிர்ந்த ரத்தத்தை அனுப்பும் போது, இப்படி கொட்டாவி ஏற்படுகிறது என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு. ஏ.சி. அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும். வீடியோ பார்ப்பது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களின் போதும், கொட்டாவி வரும்.

No comments: