July 14, 2007

வெட்டிவேர் வாசம்

வெட்டிவேரின் பிரமாண்ட தோற்றம்
இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும், 10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும். இதில் கவனிக்கப் படவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண்??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்'' என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.


நம்மிடம் அறியப்பட்டு இன்று ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மடகாஸ்கர் நாட்டில் 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக அவர்களின் 1,00,000 பேர் பயன்படுத்தும் ரயில்பாதை சுமார் 280 மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டது. ஆனால் வெட்டிவேரின் உதவியால் அது சீராக்கப்பட்டு இன்று தடையின்றி ஓடுகிறது. விவசாயம் வளர்ந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. அதன் PDF காட்சியை இங்கே காணுங்கள்.
சுற்றுலாவிற்கு பெயர் போன நமது மலையரசி '' நீலகிரி '' ஒவ்வொரு மழையின் போதும் நிலசரிவுகளால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நாமும் வெட்டிவேரின் உதவியால் தீர்வு காணலாமே. இதை பார்த்துவிட்டு உங்கள் விவசாய நண்பர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.

No comments: