"Sensible comedy is the key to my success"
Y.Gee.Mahendra
திரையுலகம், சின்னத்திரை மட்டுமல்லாது நாடக உலகத்திலும் கிட்டத்தட்ட 55 வருடங்களாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் அமெரிக்கா வந்திருந்தபோது அவரோடு பகிர்ந்துகொண்ட வானொலி நேர்முகம். எனக்கு மிகவும் நல்லதொரு பரிச்சையமான மனிதர். ஒருமுறை நான் அப்போதிருந்த ஜே.ஜே.தொலைக்காட்சி (இப்போதைய ஜெயாத் தொலைக்காட்சி) நிகழ்ச்சியொன்றில் நண்பர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நடுவராக வந்திருந்த திரு.ஒய்.ஜி.மகேந்திரன் என்னை மிகவும் பாராட்டி, அவரது அலுவலகத்தில் வந்து சந்திக்கச் சொன்னார். காரணம் நான் எடுத்துக்கொண்ட பாத்திரமே அவருடைய "இரகசியம் பரம இரகசியம்" என்றதொரு நாடகத்தில் உள்ள நகைச்சுவைக் காட்சிகள்தான். சினிமாவில் உள்ளவற்றைப் பிரதிபலிப்பதுதான் வழக்கம். 1996-1997 ல் தொலைக்காட்சிகள் இன்றைய அளவுக்கு பிரபலமாகாத நேரம் ஆதலால் நான் இவரது நாடகத்திலுள்ள காட்சிகளை நடித்து கைதட்டு வாங்கியதால், பிரமித்துப்போய் என்னை வாரியணைத்துக்கொண்டார். பிறகு நானும் பலமுறைச் சந்தித்திருக்கிறேன், அவரால் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்த நாட்களை இன்றும் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். மிகவும் ஒரு நல்ல மனிதர். நிஜத்திலும் இவர் ஒரு நகைச்சுவையான மனிதர். இவரின் அலுவலகத்திற்கு யார் எப்போது போனாலும் விருந்துபசரிப்பு உண்டு. பிறகு நான் தொடர்ந்து சந்திக்க வாய்ப்புக்களில்லை. இவரின் மகளும் இவரும் சேர்ந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில்கூட நான் பொதிகைத் தொலைக்காட்சியில் பங்கேற்று பரிசு பெற்றேன். எவ்வளவு உயரத்தில் சென்றாலும், நகைச்சுவையுணர்வோடும், எளிமையோடும் பழகக் கூடிய எத்தனையோ திரையுலக நண்பர்களில் திரு.ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இனி தொடர்ந்து அவரது பேட்டியைக் கவனிப்போம். உடன் உரையாடுபவர் KZSU பண்பலை வானொலிக்காக எனது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்.
Powered by eSnips.com |
No comments:
Post a Comment