நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா
பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை. நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார். அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம். உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை. ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான். இவ்வாறு அல் பாரி கூறினார். அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment