- இலங்கையில் இரண்டு வயது பெண்குழந்தையை விற்க முற்பட்ட தகப்பன் கைது : இலங்கையின் வடமத்திய மாகாணமான தம்புள்ளயில் தனது இரண்டு வயதுப் பெண்குழந்தையை வாராந்தப் பொதுச் சந்தையொன்றில் விற்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்
- உலக உல்லாசப் பயண தினம் இம்முறை இலங்கையில் கொண்டாடப்படுகிறது : இன்று உலக உல்லாசப்பயண தினமாகும். இதனையொட்டி 150 நாடுகளை அங்கத்தவர்களாகக்கொண்ட உலக உல்லாசப் பயண அமைப்பு தனது இவ்வருடக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக, அண்மைக் காலங்களில் உல்லாசப் பயணத்துறையில் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இலங்கையைத் தெரிவுசெய்திருக்கிறது
- பாகிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன : பாகிஸ்தானில் மேலும் 5 வருடங்களுக்கு அதிபராகத் தொடர்வதற்கான, மறு தேர்தலுக்காக, அதிபர் முஷாரஃப் அவர்கள், தனது வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.
மேலும் பல எதிர்க்கட்சி வேட்பாளர்களும், இன்று வியாழக்கிழமை காலை தமது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதேவேளை, இராணுவத் தளபதியாக செயற்படும் சமகாலத்தில், அதிபராகவும் முஷாரஃப் அவர்கள் தொடர முடியாது என்று வாதிடும் எதிர்த்தரப்பினரால், தாக்கல் செய்யப்பட்ட, முஷாரஃப் அவர்களின் வேட்பாளருக்கான தகைமையைக் கேள்விக்குள்ளாக்கும் பல மனுக்கள் குறித்து, பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகின்றது. - இலங்கை மோதல்களில் 19 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கை இராணுவத்தினர்இலஙகையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள், கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் இன்று மாத்திரம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- பர்மாவில் தொடரும் போராட்டத்தில் ஒரே நாளில் குறைந்தது ஒன்பது பேர் பலி : பர்மாவின் பிரதான நகரான ரங்கூனில் மற்றுமொரு நாளாக நடந்த மோதல்களில் ஒன்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், பதினோரு பேர் காயமடைந்ததாகவும், பர்மிய அரசு கூறுகிறது
- பர்மாவில் போராட்டங்களை நடத்துபவர்கள் மீது வன்செயல்களை பிரயோகிக்கக் கூடாது என்று அமெரிக்க வலியுறித்தியுள்ளது : பர்மாவில், அமைதியான போராட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராக வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக விபரித்துள்ள அமெரிக்கா, அவை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
- பால்கன் போரில் முன்னாள் யூகோஸ்லாவியாவின் இரு இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகள் என அறிவிப்பு : பால்கன் போரின் ஆரம்பத்தில், 1991 ஆம் ஆண்டில், குரோசியாவின், வுகோவார் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பில், யூகோஸ்லாவியாவின், இரண்டு இராணுவ அதிகாரிகளை, த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச தீர்ப்பாயம், குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
- விண்வெளியில் நாசாவின் புதிய ஓடம் செலுத்தப்பட்டது : செவ்வாய் கிரகமும், வியாழன் கிரகமும் சுற்றிவரும் பாதைகளுக்கு இடையே இருக்கின்ற பகுதியில் உள்ள விண்கற்களின் தொகுதிக்கு முதற்தடவையாக விஜயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும், ஒரு விண் ஓடத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஏவியுள்ளது
September 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment