October 06, 2007

  • ஐஸ்லாந்து இராஜதந்திரி விடுதலைப் புலிகளை சந்தித்த சர்ச்சைக்கு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு பொறுப்பேற்பு : இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமலும், அறிவிக்காமலும் ஐஸ்லாந்து நாட்டு இராஜதந்திரி ஒருவரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து போர்நிறுத்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கௌர்வதாகத் தெரிவித்துள்ளது
  • பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாராப் வெற்றி : பாகிஸ்தானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி இராணுவத் தலைவர் பர்வேஷ் முஷாராப் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது
  • ஊக்க மருந்து சர்ச்சையில் மன்னிப்பு கோரியுள்ளார் மரியன் ஜோன்ஸ் : பிரபல அமெரிக்க தடகள வீராங்கனையான மரியன் ஜோன்ஸ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது தொடர்பாக பொய் கூறியதற்காக மன்னிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார். 2000 ஆம் ஆண்டு சிட்டினியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற மரியன் ஜோன்ஸ். அப்போட்டிகளுக்கு முன்பாக ஊக்க மருந்தினை உட்கொண்டதை ஒப்பு கொண்டுள்ளார்
  • கர்நாடக அரசுக்கு பாரதிய ஜனதா ஆதரவு வாபஸ் : தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில், ஆட்சி மாற்றம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிக்கும், முன்னாள் பிரதமர் தேவகெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையில் நிலவிய பிரச்சினை சனிக்கிழமையன்று உச்சகட்டத்தை எட்டியது
  • இன்றைய (அக்டோபர் 06 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: