October 04, 2007

  • 'ஐஸ்லாந்து இராஜதந்திரி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது குறித்து ஐஸ்லாந்து அரசு மன்னிப்பு கோரியது'- இலங்கை அரசு : இலங்கை வந்த ஐஸ்லாந்து நாட்டு இராஜதந்திரி ஒருவர், இலங்கை அரசின் அனுமதியின்றி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது தொடர்பில் ஐஸ்லாந்து அரசு தம்மிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது
  • விடுதலைப்புலிகளின் பகுதிக்கு போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் செல்வதில் பிரச்சினை : விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக இன்று கிளிநொச்சிக்குச் சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்கு ஓம்நதை இராணுவ சோதனைச்சாவடியின் ஊடாகச் செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளுக்கும், போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான தொடர்புகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறாக தடையேற்படுத்தப்பட்டுள்ளது எனவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தெரிவித்துள்ளார்
  • பர்மாவில் கைதுகள் தொடர்கின்றன: சர்வதேச நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் அதிகரிக்கிறது : பர்மாவில் கடந்த வாரம் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும், ஆட்களைச் சுற்றி வளைப்பதற்காக, அந்த நாட்டின் பெரிய நகரான ரங்கூனில், பர்மியப் பாதுகாப்புப் படையினர் மேலும் தேடுதல்களை நடத்தியுள்ளனர்
  • எதிர்க்கட்சித் தலைவியைச் சந்திக்க பர்மிய இராணுவத் தலைவர் கொள்கையளவில் ஒப்புதல் : பர்மாவின் இராணுவத் தலைவர், ஜெனரல் தான் ஷ்வே, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவுத் தலைவி, ஆங் சான் சூச்சீ அவர்களை சந்திக்கக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது
  • பேனசீர் நாடு திரும்புவதற்கான உடன்பாடு : பாகிஸ்தானுக்கு தான் மீண்டும் திரும்பவும், மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்குமான நிபந்தனைகள் வாய் வழியாக ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ கூறியுள்ளார்
  • காங்கோ விமான விபத்தில் பலர் பலி : காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாஷாவில் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியொன்றில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 04 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: