November 03, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

  • பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்
  • பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகள் சிலவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர் : பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் அரசப்படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள், அந்த பகுதியில் இருக்கும் மூன்று தாலுக்கா அளவிலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக கூறியுள்ளனர்
  • பர்மாவிற்கு இரண்டாவது முறையாக செல்கிறார் ஐ.நா விசேடத் தூதுவர் : பர்மாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக பர்மா விவகாரங்களுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்
  • மெக்ஸிகோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது : மெக்ஸிகோவில் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்பகுதி மாநிலமான டபாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வானூர்திகள் மூலம் மீட்கும் பெரிய நடவடிக்கை ஒன்று தொடர்ந்து வருகிறது
  • ஹைதியிலிருந்து இலங்கை அமைதிகாப்புப் படையினர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் : ஹைதியில் ஐ,நா.மன்ற அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை துருப்பினர் நூற்று எட்டு பேர் பாலியல் அத்துமீறல்களிலும் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்
  • கர்ணல் கருணா லண்டனில் கைதுசெய்யப்பட்டார் : விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கர்ணல் கருணா, பிரிட்டிஷ் பொலிசார் மற்றும் குடிவரவுத்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையினால் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது
  • தமிழ்ச்செல்வன் மறைவையொட்டி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரப்பகுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசின் விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வன்னிப்பிரதேசம் எங்கும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • அமெரிக்க விருது பெற்ற தலாய் லாமாவுக்கு புதுதில்லியில் பாராட்டு விழா; இந்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு : திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு, சமீபத்தில் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க காங்கிரஸ். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு அமெரிக்கா இந்த விருதை வழங்கியது

No comments: