"தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் தேர்தலை மனதில் வைத்து தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர். கடந்த காலத்தில் நம்மிடையே இருந்த பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளியாக அவர் திகழ்ந்தார். சுயநலத்துடன் குறுகிய வட்டத்துக்குள் இருந்தவர்களை நாட்டின் மீது பற்றுக் கொள்ள வைத்தார்" - தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில செயலர், மதுரையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில்.
திரு."யாழ் சுதாகர்" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..
"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக"
No comments:
Post a Comment