November 10, 2007

பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்

கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான 'தி நேகட் அண்டு தி டெட்' மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார். நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.
அவருக்கு, 'தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்' மற்றும் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்' ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. இதில் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்'கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது. அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

No comments: