December 05, 2007

"எழுதுவதை நிறுத்தப் போவதில்லை" - தஸ்லிமா நசரீன்

  • வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நசரீன் அவர்களுக்கு எதிராக சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் காரணமாக அவர் தமது எழுத்துக்களை நிறுத்தப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். மேலும், தமது எழுது பொருளும் இதனால் மாறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபகாலத்தில் தாம் வாழ்ந்துவந்த கொல்கத்தாவை விட்டு அவர் சமீபத்தில் வெளியேறிய பிறகு பிபிசியிடம் முதல் முறையாக பேசிய தஸ்லிமா அவர்கள், மதசார்பற்ற மனிதநேயம் பற்றி மட்டுமே தாம் எழுதி வந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கில்லை என்றும் கூறினார். கொல்கத்தாவில் சில முஸ்லிம் குழுக்கள் தஸ்லிமாவுக்கு எதிராக நடத்திய வன்முறை ஆர்பாட்டங்களுக்கு பிறகு, மேற்கு வங்க மாநில அரசு அவரை கொல்கத்தாவை விட்டு பலவந்தமாக வெளியேற்றியது. அவர் தற்போது, இந்திய தலைநகர் புது தில்லியில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
  • மத நிந்தனை குறித்து பிரிட்டன் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு : பிரிட்டனில் நாடக அரங்குகளும், ஒலிபரப்பாளர்கள் மீது, தெய்வ நிந்தனை அல்லது மத நிந்தனை குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு தொடுக்கப்பட முடியாது என்று லண்டனில் உள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முக்கியத்தீர்ப்பு, மதப்பிரச்சாரம் செய்யும் கிறித்தவர்கள் குழு ஒன்று பிபிசி மீது தொடுத்த வழக்கில் வருகிறது. அவர்கள் "ஜெரி ஸ்ப்ரிங்கர் ஒரு இசைநாடகம்" என்ற நிகழ்ச்சி குறித்து ஆட்சேபித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏசு கிறிஸ்து, சிறு குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியை அணிந்து கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தார் மேலும் அவரை கொஞ்சம் ஆண் ஓரின உறவுகொள்பவராகவும் இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி மத நிந்தனை புரிந்தே இருந்தாலும் கூட, பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ், நாடக அரங்குகளும் ஒலிபரப்பாளர்களும் மத நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதால், பிபிசி மீது இந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது
  • கச்சா எண்னை விலை உயர்வு : அபுதாபியில் ஓபெக் மாநாடுபெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான ஓப்பெக், கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு விடுத்த வந்த கோரிக்கையை பரிசீலிக்க, ஒப்பெக் அமைப்பு அபு தாபியில் கூடியது. அமெரிக்க வீடு மற்றும் கடன் சந்தைகளில் தொடங்கிய பொருளாதார பிரச்சினைகளை, எண்ணெய் விலைகள் உயர்வது மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அமெரிக்கர்கள் அஞ்சுவதாக பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்
  • அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி - இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  • வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு : மோதல்கள் அதிகரித்துள்ளனஇலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது
  • வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு : இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்
  • மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை : கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்
  • அமெரிக்க அறிக்கையை பாராட்டுகிறார் இரானிய அதிபர் : இரான் தற்போது அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருக்கும் முடிவை, இரானிய அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் அவர்கள் பாராட்டியிருக்கிறார்
  • கொண்டலீசா ரைஸ் ஆப்பிரிக்கா விஜயம் : காங்கோவில் போராளிக் குழுவினர்அமெரிக்க அரசுத்துறை செயலர், கோண்டலீசா ரைஸ் அவர்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் சர்வதேச நாடுகளால் மத்யஸ்தம் செய்து ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த ஆப்ரிக்காவுக்கு ஒரு நாள் விஜயமாக வந்திருக்கிறார்

No comments: