மதுரையில் கலைஞருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஊனமுற்ற ஒரு வாலிபருக்கு அடி, உதை-கைது
மறைந்த முன்னால் சபாநாநயகர் பண்பாளர் திரு.பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, "யாருமே எதிர்ப் பார்க்காத விழா இது. இவ்வளவு விரைவாக நடைபெறும் என எதிர் பார்க்கவில்லை. பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் குடும்பம் திராவிட இயக்கத்தை வளர்த்த குடும்பம். பேராசிரியர் குறிப்பிட்டது போல நீண்ட காலம் திராவிட இயக்கத்தை வளர்த்த பெருமையுடையது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலையை திறப்பது இந்த மண்ணுக்கு பெருமை" என முதல்வர் புகழாரம் சூட்டினார்..இதற்காக நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து முத்து நகர் விரைவு வன்டியில் மதுரை வந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் உடன் வந்தனர். இன்று காலை மறைந்த முன்னால் சபாநாநயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. விழா முடிந்து அரசு சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்ட தமிழக முதல்வருக்கு, மதுரை பைக்காராவை சேர்ந்த சுந்தரன் மகன் எஸ்.ராஜா, ஊனமுற்றவரான இவர் ஊனமுற்றவர்களுக்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக கறுப்புக் கொடி காட்ட முயன்றார்.
('அடி, உதை, அடிக்காதே' என்ற குரல்களை காணொளிப்பதிவில் கேட்கலாம்), உடனே காவல்துறையினர் கைது செய்து தல்லாக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் விழா நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை நடைபெரும் விழாவில் பின்னனிப் பாடகர் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலாவிற்கு பொற்கிழி வழங்கி பாரட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மு.க.அழகிரி செய்து வருகிறார்.
No comments:
Post a Comment