நன்றி நவிலல் தினம் - Thanks Giving Day
"தாங்க் யூ"
"டாங்க்கி"
"கா பை"
"ஹ்வாலா"
"மாகே"
"டாரிம்"
என்ன? புதுசுபுதுசா எதோ சொல்றேன்னு பாக்குறீங்களா? இந்த முகவரிக்கு எப்படிப் போகலாங்க"ன்னு ஒருத்தர்ட்ட கேட்டா, அவர் பொறுமையா அந்த இடத்துக்குப் போகும் வழியைச் சொன்னா நாம் என்ன சொல்வோம். ரெம்ப நன்றிங்க என்று சொல்கிறோம் இல்லையா? அந்த நன்றி என்ற சொல்லுக்கு உலகில் ஒவ்வொரு நாடும் என்ன மாதிரி சொல்றாங்க? அதத்தான் மேல சொன்னேன். எந்த நாட்டுல் எப்படிச் சொல்றாங்கன்னு இந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல் இருக்கு. அதப் பாத்து நீங்க நன்றியை எங்க எப்படிச் சொல்லலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம். சரி இப்ப விசயத்துக்கு வருவோம்!
"எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது. அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி ஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும் செல்வதை பெரும்பாலும் அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரைப் பார்த்து நமஸ்தே... வணக்கம்.... ஹாய்..... என்று சொல்கிறார் என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்குப் புதுசு என்று அர்த்தம்.அதே நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள். வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார்?
இங்கிலாந்து...!
ஏன்?
இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா?
இங்கிலாந்து
1600-களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு சாரார் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி இங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" (puritans) என அழைக்கப்பட்டனர்.மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மே ·ப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620ம் ஆண்டு) துவங்கினர். உணவு, துணி, யுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.
கனவு பூமி
ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தை குட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் கப்பல் போன போக்கில் பயணித்தனர்! கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7600&lang=ta&Itemid=163
No comments:
Post a Comment