காணொலி : மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்
சமீபத்தில் ஐ.நா - வின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்ற மகிந்த அமெரிக்கா சென்றிருந்தார். ஐ.நா. மன்றத்தில் அவர் உரையாற்ற எழுந்து வரும்போது சுமார் 23 நாடுகளின் தலைவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டனர். இதனையடுத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் மகிந்த உரையாற்ற வேண்டிய கட்டாயம் தோன்றியதோடு, முகத்தில் கரியும் பூசப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அதனை ஈடுசெய்ய அவருக்கு அமெரிக்காவின் ஹீஸ்டன் மாநிலத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஒன்றைக் கொடுக்க அமெரிக்க செனட்டர் ஒருவர் முயல, கிணறு தோண்ட பூதம் வெளியேறிய கதையாக இது முடிவடைந்துள்ளது. மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில் ஆரம்ப உரை நிகழ்த்த அமெரிக்காவில் உள்ள பிரபல தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லி அழைக்கப்பட்டிருந்தார். அவரும், ஜனாதிபதியும் ஒன்றாக சட்டக்கல்லூரியில் பயின்றதாகக் கூறப்படுகிறது. ஜார்ஜ் வில்லி தனது வரவேற்புரையில் ஜனாதிபதியை மிகவும் புகழ்ந்து, பின்னர் சிறிது சிறிதாக காலை வாரினார். ஒருவகையான வஞ்சப்புகழ்ச்சி மற்றும் நக்கல் கதையால் ஒரு சமயத்தில் ஜனாதிபதி தனது தலையில் கைவைத்து நெற்றியை சாய்க்கும் அளவிற்கு அவர் உரை அமைந்திருந்தத என்றால் பாருங்களேன்.
நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.
மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.
விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !
அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????

For Video : Please visit the link :
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20954&Itemid=63
Courtesy : Athirvu

நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163
காணொலி : மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20954&Itemid=63
விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148
கள்ளக்காதல் விவகாரத்திற்கு கவுன்சிலிங் செய்யும் கோலிவுட்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20940&Itemid=70
'சுப்ரமணியபுரம்' சசிகுமாரின் அடுத்த படம் "ஈசன்"
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20952&Itemid=68
கலைஞரின் "இளைஞன்" ஓரு வரலாற்றுப் படம் : விரைவில் திரைக்கு வருகிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20953&Itemid=68
கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னும் பூர்த்தியடையவில்லை : இலங்கை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20934&Itemid=91
திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா? : கார்த்தி சிதம்பரம் ஆவேசம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20932&Itemid=55
சென்னை, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா : பிரதமர் மன்மோகன் சிங் திறப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20930&Itemid=55
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20927&Itemid=54
2011-ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாகிஸ்தான் பயணம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20924&Itemid=56
காஷ்மீர், தீவிரவாதிகளுடன் 10 மணி நேர கடும்போர் முடிவு : 2 தீவிரவாதிகள் சாவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20922&Itemid=54
பிகார் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் : 53 சதவீத வாக்குகள் பதிவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20920&Itemid=54
No comments:
Post a Comment