நான் கேட்ட கேள்வி "ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்று உனது தம்பிகளுக்குப் பெயர் வைத்துள்ளீர்கள். அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா என்பது தான் அந்தக் கேள்வி. "பேர் அழகா இருக்குன்னு வைச்சிருப்பாங்க..இதுக்கெல்லாம் அர்த்தம் எதுக்கு? சும்மா கூப்பிடத்தானே"..என்று சொன்ன மனைவியிடம் நான் அதற்கு அர்த்தம் சொல்லவா என்று கேட்டேன். மிகவும் ஆவலுடன் பதிலை எதிர்பார்த்த மனைவியிடம் வேடிக்கையாக அச்சில் ஏற்ற முடியாத ஒரு அசிங்கமான ஒரு பதிலைச் சொன்னேன்.அதுசமயம் நான் படித்த ஓஷோவின் சுயசரிதை தமிழாக்கத்தில் "பாபு" என்பதற்கு நாற்றம் என்று ஏதோ ஒரு இந்திய மொழிகளில் அர்த்தம் இருப்பதாக நான் படித்ததை சொல்லி ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்பதற்கு மூன்று வகை நாற்றங்களை வரிசைப்படுத்தினேன். பிறகு தமிழ் மொழியின்சுவையையும்,இனத்தின் பெருமையையும் பல்வேறு நேரங்களில் சொல்லி, பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சொல்லி அதன்படி நான் எனது குழந்தைக்கு உதயநிலவன் என்று தமிழில் பெயர் சூட்டினேன்.பட்டப்படிப்பு அதுவும் சமூகவியல் படித்தவர் என்பதால், திராவிட இயக்கங்கள் குறித்த ஒருவகை அறிமுகம் இருந்ததால் எனது பணி இலகுவானது.அதன் பின்பு எனது மாமனார் இல்ல வாரிசுகள் பலரும் தமிழில் அகிலன்,எழில்,முகில் எனப் பெயர் சூட்டிகொண்டது எனக்கு ஒருவகை வெற்றியே எனலாம். தொடர்ந்து படிக்க இணைப்பை அழுத்தவும். Thinnai
No comments:
Post a Comment