June 28, 2007

சேதி வந்தது : சிறுகதை - வாஸந்தி

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.Please click the link
Thinnai

No comments: