June 18, 2007

யார் குற்றம்? - சிறுகதை

செல்போனை ‘வைப்ரேஷன்’ மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப்போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக்கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவியிலிருப்பதால் அனைத்தையும் கையாளவேண்டியது அவன் கடமை. ஆனால் இப்படிப் பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி என்று மிகவும் கோபித்துக்கொண்டவரிடம், ‘ஓ.கே. சார், ஐல் டேக் கேர்! லெட் மி ஹேவ் சீரியஸ் லுக் இன்டுயிட்’ என்று சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, ‘காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்’ என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, போன் செய்வதற்கு முன், மெஸேஜைப் படித்தான். இடிந்தே போய்விட்டான் நிதிஷ். மை காட்….ஓ’வென அழமுடியாத குறையாய்….எம்.டி.யிடம், “சார், எம்பையன் இறந்துட்டான் சார், நான், கௌம்புறேன் சார்’ என்று சொல்லி முடிப்பதற்குள் கதறியே விட்டான். உடனடியாக எம்டி-யின் டிரைவர் நிதீஷ்-ஐ காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தான்.

அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.

மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.

“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.

அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.


இது யார் குற்றம்?
இது அன்றாட வாழ்வில் நடக்கக் கூடிய,
ஏன் நடந்த ஒரு சம்பவம்.
குற்றம் யாருடையது?
முடிவை உங்கள் கைகளுக்கே விட்டுவிடுகிறேன்.


- நவின்

6 comments:

Anonymous said...

இந்தக் கதை சிறுகதை இல்லை, ஒரு பெரிய கதையை சிறியதாய்ச் சொல்லியிருக்கிறீர். கருத்துச்சொல்ல இன்னும் மனசு அந்தக் கதையையிலிருந்து எழுந்து வரவில்லை. நீங்கள் இந்தக் காலத்துப்பிள்ளை என்பதால் சரியான வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். சும்மா ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொல்ல நினைத்தால், அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தைக் கொஞ்சம் ஒரு வரியில் சொல்லியிருந்தாலும்…??.சொல்லாவிட்டாலும் கூட கதை நன்றாகவே இருக்கிறது. இந்த நவீன உலகம் எதையோ நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எதையெதையோ இழக்கிறோம். இழக்கக்கூடாததையெல்லாம் இழக்கிறோம். அந்தச் சின்னப் பிஞ்சு ஒரு எடிசனாகலாம், ஒரு எம்.ஜி.ஆர் ஆகலாம். மொத்தத்தில் இந்த “யார் குற்றம்?” தங்களின் சிறுகதைகளான கிராமம், வெள்ளையம்மா இவைகளைவிட ஒரு படி மேலே சென்றிருக்கிறது அதிலும் குற்றம் கண்டுபிடிக்க விரும்பாத அந்த இனிய தம்பதிகளின்….அந்தக் கடைசி வார்த்தை.. ஐ லவ் யு…..உண்மையாகவே... டச் ஃபினிஷிங்.

ஆதியக்குடி சம்பத் - சவூதி அரேபியா

Anonymous said...

அவசரத்தில் முக்கியமான ஒரு வரியைச் சேர்க்க மறந்துவிட்டேன். பரவாயில்லை மறுபடியும் சேர்த்துவிடுகிறேன்.அது..

"மனமார்ந்த பாராட்டுக்கள், கொஞ்சம் கண் கலங்கிவிட்டதை ஒப்புக்கொள்கிறேன்...எத்தனை பெரிய பில்கேட்ஸ் என்றாலும்..அப்பா பாசம்..பெற்ற பிள்ளை மீது கலக்கிவிடும்....கண்களை....

ஆதியக்குடி சம்பத் - சவூதி அரேபியா

வெங்கட்ராமன் said...

நன்றாக இருக்கிறது கதை.

என்னைப் பொறுத்த வரை எல்லா இழப்புகளுக்கும் காரணம்

அலட்சியம்

Bala said...

Ithu oru NAVEENA IRUNDA VEEDU, Bharathi thasan kathapathiram ange pamarargal, Naveenin kathapathirm inge Padithavargal, Barathithasan, Irunda veettil Kalviyai kattayamakkiruppar, neengal oru padi mele poye kalvi mattumalla athai payanpaduthavum theriyavendum enpathai nasookkaga cholliyirukkireergal.

Angila kalappai thavirthuirunthal Chirantha sirukathai varisaiyil idam petrurikkum .
G.S. Seetharaman

Bala said...

KANAVAN , MANAIVI, oru vandiyin iru sakkarangal yar meethum pazhi pottukkollaml kutrangal thanakku thane etrukkollum mana pakkuvam ovvoruvarukkum irunthuvittal oru kudumbam kovailagalam, athil iruvarum theyvamagalam entru ilaimarai kayaga unarthirukkireergal.
Bala

Bala said...

Purithalai chonnathal
ithu kathaiyalla
kavithai.

bala