June 14, 2007

தமிழோசை

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய "BBC" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

No comments: