July 21, 2007

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.
* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
-தாயுமானவர்

1 comment:

யாழ் சுதாகர் said...

மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையத் தளம்... என்னை நெகிழ வைக்கிறது.

ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது.மயங்க வைக்கிறது.

தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துனையிருப்பானாக.