July 29, 2007

ஒரே குடியரசுத்தலைவன்!

இவன்
முதல்க்குடிமகன் மட்டுமல்ல,
கடைசிக்குடிமகனும்கூட
ஆம்!
எங்களுக்கு வேண்டாம்
இனியொரு குடியரசுத்தலைவன்,
இந்த சிரிப்பழகன்,
சிகரம் தொட்டவன் போதும்
எங்கள் இந்தியாவை
நாங்கள் கற்பனைக்கெட்டாத்
தூரத்துக்குக்கொண்டு செல்வோம்!
இந்த வாழும் தெய்வம்
பிறந்த மண்ணில் பிறந்ததற்காகவும்,
அவனருகிலேயே
வசிக்க முடிந்ததற்காகவும்
பெருமையடைகிறேன்! பேறு பெற்றேன்!!
ஜெய்ஹிந்த்!!
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த அன்றே சென்னைக்கு அப்துல் கலாம் வந்திறங்கிய போது முகம் கொள்ளாத சிரிப்போடு இருந்தார். அவரைச் சந்திக்க வரிசையில் நின்றிருந்த விசிட்டர்களில் ஒரு பெண்மணி, கலாமிடம் உற்சாகமாக சில வார்த்தகளைச் சொன்னபடியே, அழகிய ஜரிகைக் காகிதத்தில் சுற்றிய ஏதோ ஒரு பரிசுப் பொருளை அவரிடம் அளிக்க... "என்ன இது" என்று கேட்டார் அப்ல்கலாம். ஏதோ "ஒரு விலை மதிக்கமுடியாத பரிசு" என்று அந்தப் பெண்மணி சொல்ல... படக்கென்று கலாமின் முகத்திலிருந்த சிரிப்பு மாறியது. “இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று சற்றே கடுமயாகச் சொல்லி... பரிசை அந்தப் பெண்மணியிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, வேகமாக அவரைத் தாண்டிப் போனாராம். அன்று இரவே கிண்டி அண்ணா பல்கலக்கழகத்தின் விருந்தினர் மாளிகைக்குப்போன கலாம், மறுபடி ஜாலி மூடுக்குத் திரும்பியிருந்தார். ஜனாதிபதி “புரோட்டோகால்” இல்லாத அந்தச் சுதந்திரத்தை வெகுவாகவே ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தார். தன்னை நெருங்கிய பேராசிரியர் கஷீம் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உற்சாகமாகக் கை குலுக்கி, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார். சிலர் பாசத்தோடு கட்டியணைக்க... அதற்கும் பிகு எதுவும் இல்லாமல் அனுமதித்தார். உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஐயா! அஞ்சு வருஷத்க்கு முன்னாடி, குடியரசுத் தலைவர் பதவிக்கு, உங்க பெயர் பரிந்துரைக்கப்பட்டதுமே அதை முதல்ச் செய்தியாகச் சொன்னது நான்தான். அதுவும் இதே இடத்தில்தான் சொன்னேன்... டெல்லிக்கு உங்களுக்கு லைன் போட்டுக் கொடுத்ததும் நான்தான்” என்று மலரும் நினவூட்ட... கலாம் கண்கள் லேசாகப் பனித்தன. ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் அனத்தும் அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் வளாகத்தில் செய்யப்பட்டிருக்க, அந்த ஏரியா டெபுடிபோலீஸ் கமிஷனர் சேஷசாயியை அழைத்த கலாம்... “நீங்கதான் எல்லாம் கவனிக்கப் போறீங்களா... குட்! நான் மாதத்தில் சில நாட்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டி வரும். அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வர்றவங்களில் பெரும்பாலும் மாணவர்கள்தான் இருப்பாங்க. சந்தேகம் கேட்கணும்-னு என்னிடம் வந்துகிட்டே இருப்பாங்க. பாகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அவங்க மனசு நொந்து போயிடக்கூடாது. நீங்கதான் எல்லா காவலர்களுக்கும் அத எடுத்துச் சொல்லணும்” என்று நட்புடன் சொன்னார்.

No comments: