இந்தியர் வளர்ச்சியும், கறுப்பினத்தவர் கசப்பும்
தென்னாப்பிரிக்க கரும்புத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாக வேலை செய்ய சென்ற இந்தியர் வெள்ளையர் அடக்கு முறைகளையும் மீறி சமூக, பொருளாதார ரீதியில் வளரத் தொடங்கினர்.
இந்த வளர்ச்சி பெரும்பான்மை கறுப்பின மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவித்தது. இந்தியர்கள் தம்மைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ண ஆரம்பித்தனர். இந்த எண்ணத்துக்கு வெள்ளை இன நிறவேற்றுமை அரசு எண்ணெயூற்றியது.
கடைசியில் 19949இல் கறுப்பின மக்களுக்கும் இந்தியருக்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது. அதில் பல இந்தியர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியப் பெண்ணெருத்தியின் வயிறு கிழிக்கப்பட்டு அதற்குள் பால்மா டின்கள் அடைக்கப்பட்டன.
கலவரம் முடிந்ததும் இரு தரப்புத் தலைவர்களும் ஒன்று சேர முற்பட்டனர். இதை வெள்ளையரின் நிறவேற்றுமை அரசு விரும்பவில்லை. சட்ட ரீதியாக நிற வேற்றுமையைத் திணிக்கத் தொடங்கியது. இந்திய வம்சாவழியினர் வாழ்ந்த இடங்களை விட்டு, வீடு வாசல், வியாபாரங்களை விட்டு அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியேற்றப்பட்டனர். சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இனப் பாகுபாடு சிறியவர் முதல் பெரியவர் அனைவரையும் பாதித்தது.
கறுப்பினத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் விழிப்புணர்வு பெற்று வெள்ளையரின் நிறவேற்றுமை ஆட்சிக்கு எதிராகக் கைகோர்த்து உரிமைப் போர் நடத்தத் தொடங்கினர். இப்படிப் பல பேராட்டங்களைக் கண்டு தென்னாப்பிரிக்கத் தலைவர்கள் நெல்சன் மன்டேலா, வால்டர் சிசிலு ஆகியோருடன் சிறை சென்ற இந்தியரான அகமத் கத்ரடாவும் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார். http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/11/041030_safrica.shtmlமேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க
No comments:
Post a Comment