ரஷியாவில் செய்தியாளர் ஆனா பொலிட்கொவ்ஸ்காயா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள் என தாம் எண்ணுவதாக ரஷியாவின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இலங்கையின் வடக்கே யாழ் நகரில் படைத் தளத்திற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்பத்தினரின் புகைப்படங்களை வழங்குமாறும் உத்தரவு.
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். அவர் அதிபர் புஷ் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவராக இருப்பவர்.
வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஷசீனாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
இராக்கியப் பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்களை விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் எனத் தாம் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக இராக்கிய அரசிடம் தாம் மன்னிப்பு கோரவுள்ளதாக பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் கௌஷ்னே தெரிவித்துள்ளார்.
பசபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment