August 12, 2007

செவ்வணக்கம் தோழர்களே

மேற்கண்ட பொருளின் தமிழாக்கமும், தொடர்பும் இங்கே தரப்பட்டுள்ளது. சில மணித்துளிகள் செலவிட்டு தமிழர்கள் அனைவரும் தங்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

மொழிமற்ற அனுபமின்மையாலும், நேரக்குறைவினாலும் சிலப்பல குறைகள் காணலாம். இதன் ஆங்கில வடிவம் தொடர்பு முகவரியில் காணக்கிடைக்கும்.

------------------------------------------------------

பெறுனர் : சப்பான் அரசு

அனுப்புனர்:

பேச்சுரிமயற்றவர்களின் மனித உரிமைக்கான ஆசுதிரேலியர்கள் (AHRV),
அ.பெ.எண்-991,
சிற்றாத் ஃபீல்டு,
NSW- 2135, ஆசுதிரேலியா.

ஆகசுட்டு - 2007


மான்புமிகு சின்ச்சோ அஃபே,

சப்பான் தலைமை அமைச்சர்.


பிரதிகள்:

திரு.எரிக் சோல்ஃகைம் - அமைச்சர்-அனைத்துலக முன்னேற்றம், நோர்வே,

திரு.ரிச்சர்டு பெலிட்ச்சர் - துணை அமைச்சர், அமெரிக்கா,

திரு. யாசுசி அகாசி, சிறப்புத்தூதுவர், சப்பான்,

திரு.ஆண்ற்றியாசு மைக்கேலிசு, பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றிய சனாதிபதியம்,

திரு.சேம்சு மோர்ரன், இணைப் பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றியம்.


மதிப்புயர் தலைமை அமைச்சர் அவர்களுக்கு,


இலங்கைத் தமிழர்கள் மீதான வன்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்.

AHRV என்பது ஆசுதிரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சுரிமையற்றவர்களாகவும், தங்களுக்கென போராடும் சக்தியற்றவர்களாகவும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும்/போராடும் அமைப்பாகும். இக்கடிதம் இலங்கையில் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களைக் குறித்தானது.

சுதந்திர தமிழர் வாழ்விடத்திற்க்காக போராடும் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதப்போராட்டம் தாங்கள் அறிந்த்தே.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் பிரதிநிதி திரு. யாசுகி அகாசி அவர்கள் பலமுறை இலங்கைக்குச் சென்று இருதரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்ப்படுத்தும் முயற்ச்சி தோல்வியில் முடிவது அறிந்த்தே. இம்முயற்ச்சிகளுக்கு எங்களின் நன்றி, மேலும் தொடர்ந்து மிகுந்த விருப்பத்தோடு செய்துவரும் பணிக்களுக்கு நாங்கள் மிகவும் கடைமமைபபட்டுள்ளோம்.

அதிபர் ராசபக்சே பதவியேற்றப்பின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், சிம்பாவேயில் அதிபர் முகாபேயும், ஈராக்கில் அதிபர் சதாமும் செய்ததற்கு இணையானதாகும்.

தமிழர்கள் பாதுகாப்போடும், தன்மானத்துடனும் அவர்களின் சொந்த மண்ணிலே கூட வாழமுடியாமல், அதிபர் ராசபக்சேவினால் திட்டமிட்டும், தீவிரமாகவும் படுகொலைகள் செய்யப்படுவதாக நாங்கள் நம்புகின்றோம்.

வான்வழி தாக்குதல்களாலும், நீதியற்ற முறையிலும், கடத்திக் கொண்டு செல்லப்பட்டும், மன உளைச்சலை ஏற்ப்படுத்தியும், உடல் வழியாகவும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாயை அடைப்பதற்க்காக அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருள்களின் பறிமற்றம், வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது, தமிழர்கள் தம் சொந்த வீட்டிலிருந்தும் மண்ணிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர் வாழத்தேவையான அனைத்தும் மறுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்விச்சாலைகளும் வழிபாட்டுத்தலங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு புரியும் ஊழியர்கள் கடத்திச் செல்லப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். தமிழர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை சந்திக்கவும் இவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விடுதலைப்பெற்ற பின் 35 ஆண்டுகளாக சிறுபான்மைத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பல்வேறு அமைதிப்போராட்டங்களை நடத்தியும், நல்ல தீர்வு கிடைக்காததாலேயே கடந்த 25 ஆண்டுகால ஆயுதமேந்திய போராட்டம் தொடர்கிறது.

பல்வேறு உடன்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் மதிது ஏற்றுக்கொண்டபோதிலும், பெரும்பாண்மை சிங்களர் அரசுகள் அவற்றை மதிது நடந்ததில்லை.

சமீபத்தில், பல்வேறு உலகலாவிய மனித உரிமை அமைப்புகளும், அரசுகளும் இலங்கை அரசின் தீவிரவாத ஆதரவுப்போக்கினை கண்டித்துள்ளன,
சப்பானைத் தவிர்த்த நாடுகள் ஒன்றினைந்து இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்திவைத்துள்ளன். இலங்கையானது தங்களது போர்த் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்தே உள்ளது. அரசாங்கம் நடத்திவரும் தமிழர்களுக்கெதிரான படுகொலைகு உதவிட ஏனைய பிற பொருளாதாரத்தை திருப்பிவிட ஏதுவாக வெளிநாட்டு உதவிகள் அமைந்துள்ளது. எனவே, இலங்கைக்கு சப்பான் செய்யும் உதவியானது தமிழர்களுக்கு எதிரான படுகொலைக்கும் போருக்கும் உதவிட்டதாகவே அமையும்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் மிகப் பெருமளவிலான பொருளாதார உதவியை இலங்கை மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்க்காக அளித்துள்ளது அனைவரும் அறிந்த்தே. இவ்வுதவியானது வடகிழக்குப் பகுதிகளுக்கும் சம அளவில் உதவியிருக்கும் என்ற தங்களின் எதிபார்ப்பு இயற்க்கையானதே.

ஆனால், மிகச்சொற்ப அளவிலேயே தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும். புவியமைப்படியிலான உதவி செய்த வரவு செலவு கணக்குகளை இலங்கை அரசிடமிருந்து பெறப்படுமானால் இதை எங்களால் நிரூபிக்க முடியும்.
இலங்கை அரசின் இத்தைகைய மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரை, பிற நாடுகள் செய்தது போல, தங்கள் அரசும் இலங்கைக்கு வழங்கிவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இலங்கை அரசானது அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை அர்த்தமுள்ள நேர்மையான நடவடிக்கையின் மூலம் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

ஒப்பம். இதை ஆதரிக்கும் தனிமனிதர்களும் சங்கங்களும்

உணமையுள்ள,

ஒப்பம்.

தொடர்பு : http://www.petitiononline.com/GLOBE/petition.html

No comments: