August 03, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.12 மெய்ம்மை


இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை
தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இல்லை என்று சொல்லிவிடுவது எவருக்கும் தீமை அல்ல, அது இயற்கைக் குணமாகும். அவ்வாறு இல்லாமல் தருவேன் என்று பேச்சளவில் சொல்லி, அப்படிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருவர் செய்த நன்றியை மறந்தவர் செய்யும் தவறுக்கு ஒப்பாகும்


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை
To say he has not that which he does not really possess is no harm to any one. It is the usage of the world.To lie standing or running, that the desire (of others) may fail, O thou who hast rows of bracelets! hath evil more than that of those who have destroyed a good thing done


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

No comments: