வங்கதேசத்துக்கு சர்வதேச நிதி உதவிகள் வரத் தொடங்குகின்றன : சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, வங்கதேசத்துக்கு 140 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சர்வதேச உதவி கிடைக்கும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான தாபன் சௌத்திரி தெரிவித்துள்ளார்
முல்லைப் பெரியார் புதிய அணை: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு : முல்லைப்பெரியார் அணைப் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகம் குறித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் நோக்கிலேயே கேரள அரசு செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தமிழகத்துகு வரும் நீர் விநியோகம் அதனால் பாதிக்கப்படாது என்றும், தற்போதைய புதிய அணைக்கான திட்டம், ஏற்கனவே உள்ள உச்ச நீதிமன்றத்தீர்ப்பை புறக்கணிப்பதாக அமையாது என்றும் கூறுகிறார், கேரள நீர்வளத்துறை அமைச்சரான பிரேமச்சந்திரன். முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் தொடர்ந்து இருதரப்புப் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்
எலிசபெத் அரசியின் திருமண வைர விழா கொண்டாடப்பட்டது : பிரிட்டனின் அரசி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் தமது திருமணத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பில் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் அவர்களுடன் சுமார் இரண்டாயிரம் விருந்தாளிகளும் கலந்து கொண்டனர். எலிசபெத் அரசியார்தான் பிரிட்டிஷ் இராஜவம்சத்திலேயே முதலாவதாக தமது திருமணத்தின் வைரவிழாவை கொண்டாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது
450 பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு : பாலத்தீனக் கைதிகள்பாலத்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஓல்மர்ட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு சற்று முன்னர், 450 கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
முஷாரஃப் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பான மனுக்களை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது : பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு, அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த அனைத்து பெரிய சவால்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நீதிபதிகள் குழு இது தொடர்பில் ஒரே ஒரு வழக்கை மட்டுமே நிலுவையில் வைத்துள்ளது
கெமர்ரூஜ்ஜின் முன்னாள் அதிபர் ஐ நா வின் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார் : கம்போடியாவில் கெமர்ரூஜ் அமைப்பின் பயங்கர ஆட்சி நடந்த எழுபதுகளில் அங்கு அதிகாரத்தில் இருந்த அதன் முன்னாள் அதிபரான கெய்யு சம்பன் அவர்கள், அமைப்பின் முன்னாள் தலைவர்களை விசாரணைக்கு உள்ளாக்கிவருகின்ற, ஐக்கிய நாடுகள் சபை ஆதரவிலான சிறப்பு நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டார்
இலங்கை வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு ஏற்கப்பட்டது : இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் அது அங்கீகரிக்கப்பட்டது
No comments:
Post a Comment