November 20, 2007

`கடவுள் சொன்னதால்' மகளை மணந்த கிராதக தந்தை

பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை!இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். `கடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று `கூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்!அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், `இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பகீர் தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக ஒரு பெண் இருப்பதை கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. அது பற்றி விசாரிக்க பஞ்சாயத்து கூட்டினர். பஞ்சாயத்து கூட்டியபோது தான், மகளுக்கு புது கணவன் அவளின் தந்தை அபசுதீன் என்பது உறுதியானது.பஞ்சாயத்தில் கேட்டதற்கு, `கடவுள் சொன்னதால் என் மகளை நான் திருமணம் செய்துகொண்டேன். இது கடவுளின் ஆணை' என்று கூறினார் அபசுதீன். இதை கேட்டு கிராமத்தினர் கோபம் கொண்டனர். அபசுதீன் குடும்பத்தை கிராமத்தை விட்டு தள்ளிவைக்க முடிவு செய்தனர். அபசுதீனை தாக்கவும் சிலர் முயற்சித்தனர். இந்த விஷயம் போலீசுக்கு தெரியவந்து, அபசுதீன், அவர் மனைவி சைகினா, மகள் ஆகியோரை கைது செய்தனர். மூவரும், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.ஆனால், போலீஸ் போட்ட வழக்கில், அபசுதீன் மீது கற்பழிப்பு குற்றச் சாட்டை எழுப்பவில்லை. அதனால், கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாததால், அவர்களை விடுவித்தார் நீதிபதி.நீதிபதி கூறுகையில், இந்த விஷயத்தில், போலீஸ் திடமான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை. போதிய ஆதாரமும் காட்டவில்லை. மேலும், இது குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து புகாரும் வரவில்லை. அதனால், வேறு வழியின்றி விடுவிக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறினார்.

No comments: