- சியாச்சின் பனிச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் இந்தியத் திட்டத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் :
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஹிமாலய சியாச்சின் பனிமுகட்டிற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இந்திய அரசின் திட்டத்திற்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது - செவ்வி http://www.bbc.co.uk/tamil/2115.ram - மைக்ரோசொஃப்ட் மீது பல மில்லியன் அபராதம் :
முன்னணி கணினி நிறுவனமான மைக்ரோசொஃப்ட் நிறுவனம், தனது சந்தை ஏகபோகத்தை துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதன் மீதான சுமார் 700 மில்லியன் டொலர்கள், அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது உயர்நிலையில் உள்ள நீதிமன்றம் உறுதி செய்துள்ளது - உயர்ஜாதி நாய்களைக் கோரும் பொலிஸார் : இலங்கையில் உயர்ஜாதி நாய்களை வளர்ப்போர், அவற்றை பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு தேவைகளுக்காக வழங்கி உதவுமாறு இலங்கைப் பொலிஸார் கோரியுள்ளனர்
- செர்னோபில் அணு உலையை எஃகின் மூலம் மூட முடிவு : இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் செர்னோபிலில் அணு அனர்த்தம் இடம் பெற்ற கதிரியக்கப் பகுதியை முழுமையாக மூடுவதற்காக, எஃகினால் ஆன கவசம் ஒன்றை உக்ரைன் அதிகாரிகள் நிர்மாணிக்கவுள்ளனர்
- பிரான்ஸ் அமைச்சரின் கருத்துக் குறித்து இரானிய செய்தி நிறுவனம் கண்டனம் : இரானின் அணுத் திட்டம் தொடர்பாக உலகம் ஒரு போருக்கு தயாராக வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்ணர் வெளியிட்டுள்ள கருத்துக்களை, இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது
- பிரிட்டனிடமிருந்து விமானங்களை சவுதி வாங்குகிறது : யூரோபைட்டர் விமானம் ஒன்றுபிரிட்டனிடமிருந்து 72 யூரோபைட்டர் விமானங்களை வாங்குவதற்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. பிஏஇ நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் மிகப்பெரிய ஏற்றுமதிக்கான பரிவர்த்தனையாகக் கருதப்படுகிறது
- பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது :
இராக்கில் ஞாயிறன்று பல பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு தனியார் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமத்தை இராக்கின் உள்துறை அமைச்சகம் ரத்துச் செய்துள்ளது - இன்றைய (செப்டம்பர் 17 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
September 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment