தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த முற்பட்டபோது கைதுவிடுதலைப்புலிகள் அமைப்பின் மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளராகிய சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மீறி பேரணி சென்ற வைகோ மற்றும் நெடுமாறன் உட்பட 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாகக் கூறி இவர்கள் தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும், அத்தகைய கட்சிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
மேற்கு வங்க வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு : வேலைநிறுத்தம் சுமூக நிலைமையை வெகுவாகப் பாதித்துள்ளதுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற அரசியல் வன்செயல்களைக் கண்டித்து அங்கு நடத்தப்படுகின்ற வேலை நிறுத்தம் அங்கு பரந்த அளவில் பெரும் கதவடைப்பாக உருவெடுத்துள்ளது
இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி : இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன
2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் : 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் நடைபெறும். இந்த முடிவானது கடந்த மூன்று தினங்களாக டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
பாலத்தீனக் குழுக்களுக்கிடையே மோதல்: ஐவர் பலி : பாலத்தீனத்தின் காசா நிலப்பரப்பில் நடைபெற்ற ஒரு பேரணியில், போட்டி பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
பொதுநலவாய அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு : பாகிஸ்தான அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாரப்பாகிஸ்தானில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக சாத்தியமான தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்க காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் கூடியுள்ளனர்
No comments:
Post a Comment