February 01, 2008

மதத்தின் பிடியில் அப்துல் கலாம்!?

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல். ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளையெல்லாம் கொஞ்சம் கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார். இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும், சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது. அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர்விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது. அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

அப்படியா செய்தி! பா.ஜ.க. ஆட்சியில் பாராளுமன்றத்தில் ‘சவர்க்கார்' படத்தை திறந்து வைத்து - அப்துல் கலாமை சங் பரிவார - சகிப்புவாதி என்ற ‘லேபிளில்' பார்த்து மகிழ்ந்த ஹிந்துத்வவாதிகளுக்கு - சலாம் சொல்லி ‘பேதிக்கு' கொடுத்துவிட்டாரே!

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று அரபியில் சொன்னதை தவிர்த்து - அழகிய தமிழில் ‘உங்கள் மீது இறைவனின் சாந்தி-சமாதானமும் உண்டாவதாக' என்று கூறியிருந்தால் - கொக்கரிப்பவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?

கூட்டம் கவலையுடன் கலைய - பேச்சுக்கு - அவர் வைத்த முற்றுப்புள்ளிதான் காரணம் - சத்தியமாக ‘சலாம்' காரணமல்ல.

நீங்கள் சொல்வதுபோல உரையின் ஆரம்பத்தில் கூறிய ‘சலாம்' கூடியிருந்த மாற்று மததவர்களை புண்படுத்தியிருந்தால் - உரையின் ஆரம்பத்திலேயே கலைந்திருப்பார்களே!

ginglee said...

Ungaludaiya karuthu muttal thanamaga irukiruthu...Ungalukukana padil innoru nanbarudaiya blgil irukuruthu padithukollungal...