June 26, 2007

எங்கே போகிறோம்?

நாய்க்கும், "மொபைல்' போன் வந்து விட்டது. அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது. நாயின் கழுத்தில் பட்டை போல இதை அணிவித்து விட்டால் போதும்... நாய் எங்கு ஓடினாலும், அதனுடன் பேசலாம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கின்றனர் பாருங்கள்... ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த விஞ்ஞானி கேமரூன் ராப் என்பவர் தான் இந்த, "நாய் மொபைல்' கண்டுபிடித்துள்ளார். நாய் மொபைல் போனுக்கு பெயர், "ஜியோ போன்" கழுத்துப்பட்டை போலத்தான் இருக்கும். இதை நாயின் கழுத்தில் அணிவித்து விட்டால், போதும், அப்புறம் , நாய் எங்காவது நம்மை விட்டுச்சென்று விட்டால், நாம் அதை மொபைலில் கூப்பிட்டு பேசலாம் அதன் பாஷையில். இந்த மொபைல் போனில், பல வசதிகள் உள்ளன. இரண்டு வழி ஸ்பீக்கர் உள்ளது. போனில் எஜமான் கூப்பிட்டால், அவர் பேசும் நாய் பாஷைக்கு, நாய் பதில் சொல்லும். போனில் எஜமானன் குரல் கேட்டவுடன், அவர் கட்டளையை கேட்கும். இந்த போனில், ஜி.பி.எஸ். என்ற செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய இடத்தை காட்டும் கருவி வசதி உள்ளதால், நாய் எங்கு போனாலும், அது போன இடத்தை துல்லியமாக ஜி.பி.எஸ். கண்டுபிடித்து கொடுத்துவிடும். போனில் உள்ள திரையில், எஜமான், தன் நாயை , காணலாம். அதன் மூலம், நாயை பின்தொடர்ந்து சென்று பிடிக்கவும் முடியும். இப்போது அமெரிக்காவில் உள்ள பலரும் இந்த நாய் மொபைல் வாங்கி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நாயை கண்டு பிடிப்பதில், இது மிகவும் சவுகரியமாக உள்ளது. இந்த நாய் மொபைல் போன் பயன்படுத்தும் நாய் பயிற்சியாளர் ஹாரிஸ் கூறுகையில், "நாயை "வாக்கிங்' அழைத்துப் போகும் போது, அது எங்காவது ஓடினால், அதை கண்டுபிடிக்க, கட்டளை போட இந்த போன் உதவும்!' என்கிறார்.

No comments: