June 26, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.3 யாக்கை நிலையாமை

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை

அழையாது தோன்றி செழுமையான உறவுகளை உண்டாக்கி, நிலையாது மறைந்து போகும் மனிதர்காள், தான் கட்டிய கூட்டை விட்டுப் பறந்து தூர இடம் போகும் பறவை போல தன் உடலை விட்டு, உறவுகளிடம் சொல்லாது மறைந்து போவார்.


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை

Men come into the world unasked for, appear in the house as relations and quietly depart, as the bird which goes far off, its nest-tree being forsaken, leaving their body without saying a word to relatives.


by Rev.F.J.Leeper, Tranquebar

No comments: