June 11, 2007

தமிழோசை

இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது
இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.
அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.
50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.
தேவதாசி பற்றிய ஒலிப்பதிவையும் கேட்கவும், மேலும் "BBC" இன்றைய (ஜுன் 11 திங்கட்கிழமை) செய்திகள் கேட்கவும் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com

No comments: