"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"
இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal
1 comment:
எப்போது பிச்சையெடுப்பது வேரோடு அழிக்கப்படுகிறதோ! அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும். பிஞ்சுக் கரங்கள் பசிக்காகக் கையேந்தும் அவலம் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் நாம் கனவு மெய்ப்படும். மிகவும் வேதனையான விசயம் இந்தப் பதிவு. நண்பருக்குப் பாராட்டுக்கள்!
சூரகுடி பாலா - சென்னை
Post a Comment