பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை. இன்று ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!
1 comment:
நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!
ரிப்பீட்டே. . . . . . .
Post a Comment