August 04, 2007

மரணதண்டனை அல்லது தூக்குத்தண்டனை தேவையா?

நான் கடந்த வாரம் பதிவு செய்த "மனிதம் ஏன் மரணதண்டனையை எதிர்க்கிறது" என்ற பதிவிற்கு வந்த மாற்றுக்கருத்தை இங்கே தருகிறேன். படித்துவிட்டு நீங்கள் வேறு ஏதாவது சொல்ல நினைத்தால் அதனை இங்கே தயவு செய்து பதிவு செய்யவும்.
மரியாதைக்குரிய திரு.சம்பத் அவர்கள் எழுதியது....
"மரண தண்டனை பற்றிய விளக்கம்..படித்தேன்.. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால்.. உங்களின் மனித உணர்வை என் கருத்துக்கள் பாதிக்கலாம்..
ஒரு 3 வயது சின்ன சிறு பெண் குழந்தையை..கற்பழித்து..சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி..சாக்கடையில் போட்ட ஒருத்தனுக்கு என்ன தண்டனை..கொடுக்கலாம்..ஒரு 5 வருடம்..அல்லது ஆயுள் தண்டனை போதுமா..?..3 வயது சிசுவை கொன்ற அந்த கொடியவனை, எப்படி கொன்றாலும் தப்பில்லை..

250 பேரை குண்டு வைத்து கொன்ற கொலைகாரனுக்கு..தூக்கு தண்டனை கொடுப்பது தவறா?...அதை எப்படிகொடூரத்தின் உச்சம் என்று சொல்ல முடியும்??..ஒரு நரகாசுரனைக் கொன்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகத்தான் கருதப்படவேண்டும்..

நன்றியுடன் : சம்பத் (ஆதியக்குடியான்) - சவூதி அரேபியா



அதாவது சமீபத்தில் நான் படித்த ஒரு ஆராய்ச்சிக்குறிப்பொன்று, "மரணதண்டனையின் மூலமாக குற்றங்கள் குறைவதாகத் தெரிவிக்கிறது".


ஆனாலும் குற்றம் புரிந்த அந்தக் குற்றவாளி திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், இந்த அற்புதமான மனிதப் பிறவியை அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்பதால்தான் மரணதண்டனை வேண்டாம், அதனைக்குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி, நடந்த தவற்றை உணரவைக்கலாம் என்பது இந்தச் சிறியேனின் தாழ்மையான கருத்து என்பதை இங்கே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

No comments: