பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment