September 18, 2007

  • சேதுத் திட்டம் குறித்து அனைத்துக் கட்சி மாநாடு : சேதுக்கால்வாய் திட்டம் குறித்து ஆராயுமுகமான அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று செப்டம்பர் 24 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அதற்குத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பெங்களூரில் உள்ள முதல்வர் கருணாநிதியின் மகளது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் வந்துள்ளதாக எமது சென்னைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக தோனி நியமனம் : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக மஹேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், இராணுவப் பொறுப்பை துறப்பதாக அதிபர் முஷாரப் அறிவிப்பு : பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின், அதற்கு முன்னதாக தனது இராணுவத் தளபதி பதவியை துறக்க வேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியில் ஒன்றான, பாகிஸ்தான் மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • பர்மாவில் புத்த பிக்குமார் ஆர்ப்பாட்டம் : பர்மாவின் வடமேற்கு நகரான சித்வேயில், புத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டம் ஒன்றை கலைப்பதற்கு அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்
  • பாதுகாப்பு நிறுவனங்களின் தகுதி குறித்து இராக் மீளாய்வு செய்கிறது : இராக்கில் செயற்பட்டு வரும் அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளாக்வாட்டரின் பாதுகாவலர்களால், கடந்த வாரம் 11 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இராக்கில் பணியாற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் தகுதி குறித்து அந்நாட்டு அரசு மீளாய்வு செய்யவுள்ளது
  • வெள்ளத்தில் தாக்குப் பிடிக்கக் கூடிய நெல் வகை : வங்கதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வகை நெல்லானது, அங்கு ஆண்டதோறும் ஏற்படும் வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்
  • கோதுமை உற்பத்தி குறையும் என ஆஸ்திரேலியா அறிவிப்பு : ஆஸ்திரேலியா, இந்த ஆண்டுக்கான தனது கோதுமை உற்பத்தியில், முப்பது சதவீதம் குறையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. வறட்சி காரணமாகவே இந்த உற்பத்திக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் காரணம் கூறப்பட்டிருக்கிறது
  • நேபாள அரசுக்கு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை : நேபாள நாட்டின் இடைக்கால அரசாங்கத்தில் இருந்து முன்னாள் கிளர்ச்சிக்காரர்களான மாவோயிஸ்டுகள் விலகியதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் அதிகமான மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், தலைநகர் காத்மண்டுவில் கூட்டம் ஒன்றுக்காக திரண்டுள்ளனர்
  • ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலான மான்ட்ரியல் மாநாடு குறித்த கண்ணோட்டம் : புவியைச் சுற்றியிருக்கும் காற்று வெளியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்தும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்குக் கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: