- பிரிட்டனில் மனித - மிருக சேர்க்கைக் கருக்களை உருவாக்க கொள்கையளவில் அனுமதி : ஆராய்ச்சிக்காக மனிதன் மற்றும் மிருகங்களை இணைத்து, கருக்களை உருவாக்குவதற்கு பிரிட்டனின் ஒழுங்குமுறை ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோன்ற ஆராய்ச்சிகளை சட்டபூர்வமாக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இணைந்துள்ளது.
கலப்பின கருக்கள் 99 சதவீதம் மனிதத் தன்மை கொண்டவையாகவும் ஒரு சதவீதம் விலங்குத் தன்மை கொண்டவையாகவும் இருக்கும்.
மூளை அழுகல் உள்ளிட்ட சில நோய்களை தீர்ப்பதற்குத் தேவையான குறுத்தணுக்களை பெறுவதற்காக இத்தகைய கலப்பின கருக்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொரு சோதனையும் மேலாய்வு செய்யப்படும் - டார்பூரில் பான் கீ மூண் : சுடானின் பலவருட மோதல்களால் இடம்பெயர்ந்த சில அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மேற்கு சுடானின் டார்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள், தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை மாற்றி அமைத்துள்ளார்.
- குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டவர்களே கைது: ஜெர்மனியில் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களால் கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்கர்களை குறிவைத்து குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக, ஜெர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், இருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என்றும், ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கும் ஜெர்மனியின் மத்திய அரச வழக்கறிஞர், இவர்கள் மூன்றுபேரும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களால் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்
- ஜிம்பாவேயில் பாரிய கோதுமைத் தட்டுப்பாடு : ஜிம்பாவேயில் தேசிய அளவில் கோதுமைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அங்கு ரொட்டித்( பாண்) தயாரிப்பை இரு நாட்களில் முற்றாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பெரிய ரொட்டித் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
- தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 05 புதன்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
September 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment