September 16, 2007

  • 'தென்னக பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் மதவாத சக்திகளுக்கு மத்திய அரசு இடம் தரக்கூடாது'- கருணாநிதி : சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர், திராவிட இயக்கத்தை வீழ்த்தவே சதி செய்கிறார்கள் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமக்குத்தான் பாதகம் என்று உணர்ந்து இலங்கைக்காரர்களின் தூண்டுதலின் பேரிலோ என்னவோ, இதிகாச பாத்திரமான இராமரைப் பயன்படுத்தி, திட்டத்தை தடுத்து நிறுத்த முயலுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். தென்னக மக்களின் பொருளாதார முன்னேற்றம் வளருவதற்குத் தடையாக இருக்கும் மதவாத சக்திகளுக்கு, மத்திய அரசு இடம்தரக் கூடாது என்று ஒரு தீர்மானமும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
  • தாய்லாந்து விமான விபத்தில் குறைந்தது 90 பேர் பலி : தாய்லாந்தில் ஒரு விமான விபத்தில் குறைந்தது தொண்ணூறு பேர் பலியாகியுள்ளனர். பிரபல உல்லாசபுரி நகரமான புகெட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • இராக்கில் 30 பேர் பலி : இராக்கிய போலீஸார் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் மொத்தமாக, குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்
  • கட்டிடங்களை மோத வரும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த உத்தரவிடுவேன் என்கிறார் ஜேர்மனிய அமைச்சர் : தீவிரவாதிகளால் பயணிகள் விமானமொன்று கடத்தப்பட்டு, அந்த விமானம் மக்கள் வசிக்கும் கட்டங்களைத் தாக்கப் பயன்படுத்தப்படப் போகிறது என்ற ஒரு நிலைமை ஏற்படுகின்ற பட்சத்ததில் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த ஜேர்மனியச் சட்டம் தெளிவாக இடம்தராத போதிலும் அதைச் சுட்டு வீழ்த்துவதற்குத் தான் படைகளுக்கு ஆணையிடுவேன், என்று ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சரான பிராண்ஸ் யோசஃப் யுங் அவர்கள் தெரிவித்துள்ளார்
  • ஆஃப்கானில் பங்களாதேச உதவிப் பணியாளர் கடத்தல் : பங்களாதேச உதவிப் பணியாளர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்
  • டார்பூர் நெருக்கடியைத் தீர்க்கக் கோரி உலகெங்கும் ஆர்ப்பாட்டம் :
    சுடானின் டார்பூர் பிராந்திய நெருக்கடி நிலையை முன்னிலைப்படுத்தி, உலகின் 30 நாடுகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன

No comments: