October 09, 2007

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

  • கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியாவின் மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்திருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இம்முடிவு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த நிதியமைச்சர் ப. சிதம்பரம். கர்நாடக மாநில சட்டப்பேரவையின் இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 20 மாதங்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 3-ம் தேதி பாஜகவிடம் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்க மறுத்ததால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை : ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் அம்மையார் அவர்கள் சுமார் ஒருவாரகால விஜமொன்றினை மேற்கொண்டு இன்று இலங்கை வந்திருக்கிறார்
  • பாகிஸ்தான் மோதல்களில் 200 பேர் பலி : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் அமைதி குலைந்த பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில், கடந்த மூன்று நாட்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஏறக்குறைய 200 பேர் வரை கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
  • இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு : இயற்பியல் துறைக்கான இந்த வருடத்துக்கான நோபல் பரிசு, பிரஞ்சுக்காரர் ஒருவருக்கும், ஜேர்மன் நாட்டவர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது
  • பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளை ஏற்கமுடியாது - ஆங்சான் சூச்சியின் கட்சி அறிவிப்பு : பர்மாவில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின், தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவியான ஆங்சான் சூச்சிக்கும், இராணுவ அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்காக, இராணுவ அரசால் முன்வைக்கப்படக் கூடிய எந்தவொரு நிபந்தனையையும் நிராகரிப்பதாக, அந்தக் கட்சி அறிவித்துள்ளது

No comments: