November 07, 2007

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. 2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

No comments: