November 07, 2007

வட இலங்கையில் கடும் மோதல்

  • உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள் : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
  • லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது : சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன
  • பாகிஸ்தான் அவசரநிலைப் பிரகடனத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும்: பேநசிர் பூட்டோ - பாகிஸ்தானில் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்திய அவசரகால நிலையை எதிர்த்து பொதுமக்கள் கண்டனம் செய்ய வேண்டுமென்று முன்னாள் பிரதமர் பேநசிர் பூட்டோ குரலெழுப்பியிருக்கிறார்
  • செர்பியாவின் தீவிர தேசியவாத தலைவர் செசெல்ஜ் மீது போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு ஆரம்பமாகிறது : செர்பியாவின் தீவிர தேசியவாத கடும் கோட்பாட்டுக் கட்சியின் தலைவர் வொயிஸ்லாவ் செசெல்ஜ் மீதான வழக்கு விசாரணை தி ஹேக்கில் கூடும் அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன் ஆரம்பமாகவிருக்கிறது
  • உலக எரிபொருள் பயன்பாடு 55 சதவீதம் அதிகரிக்கும் - அனைத்துலக எரிபொருள் கழகம் எச்சரிக்கை : உலக நாடுகள் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு 2030ஆம் ஆண்டளவில் 55 விழுக்காடுகள் அதிகரிக்கும் என்றும் இதில் பெருந்தொகையான எரிபொருளை சீனாவும் இந்தியாவுமே பயன்படுத்தும் என்றும் அனைத்துலக எரிபொருள் கழகம் புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
  • பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது : இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.
    ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது.
    இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார்.
    சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது

No comments: