November 02, 2007

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் மரணம்

  • விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்ச்செல்வன் - ஒரு பார்வை : தமிழ்ச்செல்வன் என்றவுடன் பலரது நினைவுக்கும் வருவது அவரது மலர்ந்த புன்னகை பூக்கும் முகம்தான்.
    இந்த மிக மோசமான உள்நாட்டுப்போரில் அவரது எதிரிகளுக்கோ, இந்த புன்னகை என்பது அவரது கொடூரத்தை மறைத்த ஒரு முகமூடி. அவ்வளவுதான். ஆனால் அவரது நண்பர்கள், அவரை ஒரு மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட போராளியாகவும், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராகவும் கருதினர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1984-ல் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிகாக்கும் படைகளை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கியமானவர். 1993-ல் அவர் ஒரு விமானத்தாக்குதலில் காயமடைந்து ஒரு காலில் இருந்து எல்லா சதையும் எடுக்கப்பட்டு, கோல் ஊன்றாமல் நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியே தெரிந்த முகமாக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கை அரசுடன் நடந்த ஏறக்குறைய எல்லா அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். இலங்கையில் உள்ள மற்ற எல்லா அரசியல்வாதிகளையும்விட ஒருக்கால் மிகவும் அதிகமாக பேட்டி காணப்பட்டவர் அவராக இருக்கலாம். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஒரு மகன் ஆகியோர் இருக்கின்றனர்
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் மூலம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில், புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • மெக்ஸிகோவில் பெரு வெள்ளம் : மெக்ஸிகோவின் தென்பகுதி மாநிலமான தபஸ்கோவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கில் அகப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்காக, மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகப் போராடி வருகிறார்கள்
  • இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர் : இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை நடத்திய பொலிஸார் அங்கு வேலை செய்த குறைந்தது 70 சிறார்களை மீட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்

No comments: