December 01, 2007

எங்கள் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் - மலேசியா

மலேசியாவின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வம்சாவழியினர் மலேசியாவில் நடத்தப்படும் விதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை வெளியிட்டதை தொடர்ந்து மலேசியா இவ்வாறு கூறியுள்ளது. கடந்த ஞாயிறன்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை மற்றும் பாரபட்சம் இருக்கக் கூடாது என கோரி தடை செய்யப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய பூர்வீகத்தினர் மீது மலேசிய பொலிஸார் தடியடி நடத்தியதோடு தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர். இதனை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை வெளியிட்டார். இதற்கிடையே, தங்களுடைய பிரஜைகள் எந்த பூர்வீகத்தை கொண்டிருந்தாலும், அவர்களை தங்களுடைய சட்டத்திட்டத்தின்படி கவனித்துக் கொள்வோம் என மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் ஹமீது அல்பர் கூறியுள்ளார். மலேசிய ஜனத்தொகையில் இந்திய வம்சாவளியினர் சுமார் ஏழு சதம் ஆகும்.

No comments: